ரஜினிக்கு தல அஜித் போன் பண்ண இதுதான் காரணமா? ’தல 61’ படம் குறித்து வைரலாகும் தகவல்!
- 7G Tamil News
- Aug 30, 2020
- 2 min read
ரஜினிக்கு தல அஜித் போன் பண்ண இதுதான் காரணமா? ’தல 61’ படம் குறித்து வைரலாகும் தகவல்!
சென்னை: வலிமை படத்தை தொர்ந்து தல அஜித் நடிக்க உள்ள படம் குறித்த தகவல்கள் வைரலாகி வருகின்றன.
போனி கபூர் தயாரிப்பில் எச். வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகி வரும் வலிமை படத்தின் ஷூட்டிங் இன்னமும் முடியாத நிலையில், அஜித் அடுத்த படத்தில் கமீட் ஆகி உள்ளதாக அந்த தகவல் கூறுகிறது.

அது குறித்து கலந்துரையாடத்தான் நடிகர் ரஜினிக்கு போன் பண்ணி அஜித் பேசினார் என்றும் கூறுகின்றனர்.
எப்போது ஷூட்டிங் தொடங்கும்
பாதுகாப்பு அம்சங்களுடன் ஷூட்டிங்கை தொடங்கலாம் என்ற அனுமதியை சமீபத்தில் மத்திய அரசு அறிவித்ததற்கு நன்றி தெரிவித்த போனி கபூர், விரைவில் வலிமை பட ஷூட்டிங்கை தொடங்க திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. அதனால், விரைவில் வலிமை படத்தின் மீதமுள்ள ஷூட்டிங் சீக்கிரமே தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
திட்டி தீர்க்கும் ரசிகர்கள்
வலிமை படம் குறித்த எந்தவொரு அதிகாரப்பூர்வ அப்டேட்டும் இதுவரை வெளியாகாத நிலையில், தயாரிப்பாளர் போனி கபூர் பதிவிடும் ட்வீட்களுக்கு கீழே மிகப்பெரிய கச்சேரியே வைத்து வருகின்றனர் அஜித் ரசிகர்கள். அப்டேட் கேட்டு தொல்லை செய்த காலம் எல்லாம் போய், தற்போது வாய்க்கு வந்தபடி திட்டி தீர்த்து வருகின்றனர்.
தல 61
இந்நிலையில், தற்போது தல அஜித்தின் 61வது படத்தை இயக்கப் போகும் இயக்குநர் குறித்த தகவல் ஒன்று கசிந்து வைரலாகி வருகிறது. துல்கர் சல்மான், ரிது வர்மா நடிப்பில் இந்த ஆண்டு வெளியாகி வெற்றி பெற்ற கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தை இயக்கிய தேசிங் பெரியசாமி இயக்கத்தில் தான் தல அஜித் அடுத்ததாக நடிக்கப் போவதாக பேசிக் கொள்கின்றனர்.
இயக்குநருக்கு சங்கடம்
கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தை இயக்கிய தேசிங் பெரியசாமியை சமீபத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் போன் செய்து பாராட்டி இருந்தார். அந்த ஆடியோ லீக்காகி இயக்குநருக்கு சங்கடத்தையும் கொடுத்தது. தேசிங் பெரியசாமி உடன் இணைந்து நடிக்கவும் ரஜினி திட்டமிட்டு இருந்த தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது.
ரஜினியுடன் போனில்
சமீபத்தில், ரஜினியுடன் சுமார் அரை மணி நேரத்திற்கும் மேலாக தல அஜித் போனில் பேசியதாகவும் ஒரு தகவல் வைரலானது. இந்நிலையில், தேசிங் பெரியசாமி இயக்கத்தில் அடுத்ததாக தான் நடிக்க முடிவு செய்துள்ளதை தான் நடிகர் அஜித், ரஜினியிடம் கூறியதாகவும் கிளப்பி விட்டு வருகின்றனர். ஆனால், இதில் உண்மை எதுவென்று அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியானால் தான் தெரிய வருமே..
ரசிகர்கள் குஷி
இப்படியொரு வதந்தி சமூக வலைதளங்களில் பரவியதை அடுத்து, கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் இயக்குநருடன் தல அஜித் கை கோர்த்தால், நல்லா தான் பா இருக்கும், தல இப்பல்லாம் இளம் இயக்குநர்களுக்கும், திறமையானவர்களுக்கு வாய்ப்பு கொடுக்க முடிவு செய்திருப்பது நல்ல விஷயம் என குஷியில் உள்ளனர்.
Source :Tamil.filmibeat (https://tamil.filmibeat.com)
Thank for Tamil.filmibeat
Comments